Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எங்களுக்கு உலகக்கோப்பை வேண்டாம்…. “இந்தியாவை ஜெயித்தால் போதும்”…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷகிப் அல் ஹசன்..!!

இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல மாட்டோம் என்று கேப்டன் கூறியதைக் கேட்ட வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12 போட்டியில் இந்தியா அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) அடிலெய்டில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் இதுவரை, இரு அணிகளும் தங்களின் 3 ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. இதன் விளைவாக, குழுவில் தங்கள் இடத்தை வலுப்படுத்த இரு தரப்பினருக்கும் இந்த போட்டி மிக முக்கியம்.

இருப்பினும், பெர்த்தில் புரோட்டீஸிடம் (தென்னாபிரிக்கா) தோற்றதால் இந்தியா இந்த போட்டியில் வெல்ல வலுவுடன் திரும்பும்.. மறுபுறம் பங்களாதேஷ், ஜிம்பாப்வேக்கு எதிரான த்ரில் வெற்றியுடன் இந்தப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது.. இதனால், இரு அணிகளின் ரசிகர்களும் அடிலெய்டில் நடக்கும் போட்டியை எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இப்போட்டிக்கு முன்னதாக இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது அவர் உலகக் கோப்பையை வெல்வதற்காக நாங்கள் இங்கு வரவில்லை என்று கூறி அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, “உலகக் கோப்பையை வெல்ல இந்தியா இங்கு வந்துள்ளது. நாங்கள் கோப்பையை வெல்ல இங்கு வரவில்லை. இந்தியாவை நாங்கள் தோற்கடிப்பது அவர்களுக்கு வருத்தமாக இருக்கும், அது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

இந்த முறை உலகக் கோப்பையை வெல்ல மாட்டோம் என்று கேப்டன் கூறியதைக் கேட்ட வங்கதேச ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Categories

Tech |