Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எங்களுக்கு ஏன் நகை கடன் தள்ளுபடி பண்ணல…. பட்டியலில் பெயர் இல்லை… வாக்குவாதம் செய்த மக்கள்..!!

சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நகை கடன் தள்ளுபடி ஆகாதவர்கள் அங்குள்ள பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகில் சிங்கம்பேட்டை சொட்டையனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. தமிழக அரசு கூட்டுறவு சங்கத்தில் ஐந்து சவரன் நகை கடன் வைத்தவர்களுக்கு கடனை தள்ளுபடி செய்ய அறிவித்திருந்தபடி, இந்த தள்ளுபடிக்கான  சான்றிதழ்  ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் சிலபேருக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை.

இதனால் அவர்கள் நேற்று காலை கூட்டுறவு வங்கிக்கு வந்து எங்களுக்கு ஏன் நகை கடன் தள்ளுபடி செய்யவில்லை என்று கூறி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனே பணியாளர்கள் விதிகளை மீறி நகை கடன் வாங்கியவர்களின்  பெயர்கள் பட்டியலில்  இடம்பெறவில்லை என்றும், எங்களுக்கு வந்த நகை பட்டியல் பெயர் படி தான்  நாங்கள் நகையை திரும்ப பயனாளிக்கு கொடுக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். உடனே இது குறித்து அம்மாபேட்டை காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் பொன்னையா, சந்திரகுமார் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளனர்.

அப்போது கடன் தள்ளுபடி பட்டியலில் பெயர் வராதவர்கள் முறைப்படி கோபி கூட்டுறவு சங்கத் துணைத் பதிவாளருக்கு புகார் மனு கொடுங்கள். தகுதியானவர்களுக்கு மறுபரிசீலனை செய்து நகையை கொடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் வாக்குவாதத்தை கைவிட்டுவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |