ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் ஆக்கபூர்வமாக திருமணமாகிவிட்டது எனக் கூறிய ஸ்ருதியின் காதலர் சாந்தனு.
பிரபல நடிகையாக வலம்வரும் ஸ்ருதி ஹாசனின் காதலனான சாந்தனு பேட்டி ஒன்றில் இவர்கள் காதல் குறித்து ஓப்பனாக கூறியுள்ளார். இவர்கள் 2020 ஆம் வருடத்திலிருந்து லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் சாந்தனு கலந்து கொண்டார்.
அப்போது அவரிடம் ஸ்ருதிஹாசன் உடனான உறவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் திட்டம் இருக்கின்றதா? என கேட்கப்பட்ட போது அவர் கூறியுள்ளதாவது, “ஆக்கப்பூர்வமாக எங்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. நாங்கள் ஆக்கபூர்வமானவர்கள். இருவரும் இணைந்து ஆக்க பூர்வமான விஷயங்களை உருவாக்கி வருகிறோம். அதுதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். திருமணம் நடக்குமா எப்போது நடக்கும் என்பது குறித்து எனக்கு தெரியாது. என்ன நடக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் இவருக்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இடையே உள்ள பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் குறிப்பிடத்தக்கது.