தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பி.பி பாஸ்கர் பரப்புரையின் போது, “உங்களுக்கு மனசாட்சின்னு ஒன்று இருந்தால் இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்க. அப்படி போடலைன்னா நீங்க சாத்தியமா நல்ல சாவே சாவ மாட்டீங்க நன்றி கெட்ட தொகுதி நாமக்கல் தொகுதி என்ற கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது