பாஜகவின் கோட்டையாக விளங்கும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தன் தடத்தை பதிக்கும் வேளையில் இறங்கி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் போன்றோர் நேற்று குஜராத் சென்றனர். அப்போது குஜராத்தில் அகமதாபாத்தில் ஆம் ஆத்மியின் பேரணியில் இருவரும பங்கேற்றனர். அப்பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது, ”குஜராத்தில் 25 வருடங்களாக பாஜக ஆட்சியில் இருந்தும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. இதனால் நான் எந்த கட்சியையும் விமர்சிக்கவும் வரவில்லை, பாஜகவை தோற்கடிக்கவும் வரவில்லை.
மேலும் காங்கிரஸை தோற்கடிக்க வரவில்லை. எனினும் குஜராத்தை வெல்ல வந்தேன். ஆகவே குஜராத்தையும், குஜராத்திகைளையும் வெற்றபெற செய்ய வேண்டும். அங்கு ஊழல் முடிவுக்கு வர வேண்டும். 25 வருடங்களுக்கு பின் அவர்கள் (பாஜக) இப்போது திமிர்பிடித்து உள்ளனர். அவர்கள் இனிமேல் மக்கள் சொல்வதை கேட்பதில்லை. இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள். எங்களை பிடிக்கவில்லையெனில் அடுத்த முறை எங்களை மாற்றுங்கள். எனவே எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள், அனைத்து கட்சிகளையும் மறந்து விடுவீர்கள் என அவர் தெரிவித்தார்.