Categories
அரசியல்

“எங்களுக்கு ஓட்டு போடலனா புல்டோசர வைத்து ஏத்துவேன்…!!” பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு…!!

உத்திர பிரதேசத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தெலுங்கானா பாஜக எம்பி ராஜாசிங் கூறியதாவது, உத்தர பிரதேச தேர்தலில் அதிக அளவிலான மக்கள் வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக தான் அத்தனை மக்களும் வீட்டிலிருந்து வெளியே வந்து வாக்களித்துள்ளனர் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு எதுவும் நடக்கும் பட்சத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்தவர்களை நாங்கள் கண்டுபிடிப்போம். எங்களுக்கு எதிராக எந்த பகுதிகளில் அதிகம் வாக்கு பதிவானது என்பதை கண்டுபிடித்து அந்த பகுதியில் உள்ள மக்களை நாங்கள் நாட்டை விட்டு வெளியேற்றுவோம்.

ஆகவே உத்திரப்பிரதேசத்தில் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் மரியாதையாக யோகிக்கு வாக்களியுங்கள். யோகி யோகி என்று முழங்குங்கள். அதிக அளவில் புல்டோசர்கள் மற்றும் ஜேசிபிக்கள் வாங்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் எதற்கு பயன்படுத்தப்படும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் விளக்கம் அளிக்க வேண்டாம் என நினைக்கிறேன். எனவே மக்கள் பாஜகவிற்கு தான் வாக்களிக்க வேண்டும்.” இவ்வாறு அவர் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இவர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |