Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு கவலையில்லை…! பேனா மை தீர்ந்து போகும் வரை எழுதட்டும்… அசால்ட் கொடுத்த அண்ணாமலை …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, எங்கள்  கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அதாவது கூட்டணியில் ஏதாவது குழப்பம் இருந்தால் நீங்கள் கேட்கின்ற கேள்வி சரியானது. கூட்டணியில் குழப்பம் இல்லாத போது எதற்கு இந்த கேள்வி பதில் சொல்ல வேண்டும். கூட்டணி அற்புதமாக போய்க்கொண்டிருக்கிறது. எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஸ்ரீரங்கம் கோவிலில் பாரத பிரதமர் உத்தரகாண்டில் சங்கராச்சாரியர் அவர்களுக்கு புது சமாதியை உலகத்திற்காக கொடுத்தார். அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டில் 16 கோவிலில் ஹெச்.ஆர்.என்.சி டிபார்ட்மென்ட் ஏற்பாடு செய்திருந்தார்கள். உதாரணத்திற்கு, ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ளே இருந்து ஏற்பாடு செய்தது ஹெ.ச்.ஆர்.என் .சி டிபார்ட்மென்ட். எதற்காக ஸ்ரீரங்கம் கோவில் என்றால்,

தமிழகத்தில் அந்தப் 16 கோவிலில் எங்கே எல்லாம் ஆதி சங்கராச்சாரியாருக்கு தொடர்பு இருந்திருக்கும் இல்லையெனில், பூஜை செய்து இருப்பார். அங்கு ஒரு பிரதிஷ்டை பண்ணியிருக்கிறார். அப்படி அந்தப் 16 கோவில்களிலும் முக்கியமான நிகழ்வுகள் நடந்தது. குறிப்பாக இது அனைத்தும் கூட அரசு நிகழ்வு. அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

பாரதிய ஜனதா கட்சி குறிப்பாக நாங்களெல்லாம் ஒரு சாமானிய மக்களை போல அதில் கலந்து கொண்டோம். இதில் எந்த தவறும் கிடையாது. பின்னர் நம்மைப் பற்றி தொடர்ந்து இந்த சங்கம், அந்த சங்கம் என நம்மைப் பற்றி எழுதுகிறார்களோ அவர்கள் எல்லாம் எழுதட்டும். பேனா மை தீர்ந்து போகும் வரை எழுதட்டும். இப்போது பிரிண்டர் தீர்ந்து போகும் வரை எழுதட்டும்.

எங்களுடைய பணி நாங்கள் செல்லுகின்ற பாதையில் இருந்து ஒரு இன்ச் கூட இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போக மாட்டோம். அதே சமயத்தில் அவர்களை மதித்து பதில் கூற வேண்டிய அவசியமும் இல்லை. காரணம் தனி மனிதர்கள், அவர்கள் கருத்தை அவர்கள் சொல்லுகிறார்கள். அதை மக்களிடம் விட்டுவிடுங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா ? இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்வார்கள்.

எனவே ஸ்ரீரங்கம் கோவிலில் அது எங்கே நடந்ததோ அந்த மண்டபத்தின் அருகில் உள்ள பெயர்ப்பலகை கருத்தியல் மண்டபம் கட்டியுள்ளார்கள். அதில் எந்த தவறும் இல்லை. இதே போன்ற நிகழ்ச்சிகள் வருகின்ற காலத்திலும்கூட அரசு நிகழ்ச்சியாக இருக்கும்போது அதையும் நடத்துவோம். ஏனென்றால் கோவில் என்பது எல்லா சமுதாயத்தினருக்கும் பொதுவான ஒரு சொத்து. அப்படித்தான் கோவில் இருக்க வேண்டும். அப்படி தான் நாங்கள் பார்க்கிறோம் என தெரிவித்தார்.

Categories

Tech |