நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சில வாரங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மீனாவின் 13ம் திருமண நாள் கொண்டாட வேண்டிய நேரத்தில், கணவரை இழந்து இப்படி துயரத்தில் இருக்கும் மீனா சமூக வலைத்தளத்தில் உருக்கமாக ஒரு பதிவை போட்டிருக்கிறார்.
“எங்களுக்கு கிடைத்த வரம் நீங்கள், ஆனால் மிக சீக்கிரமே எங்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டீர்கள். ஆனால் எப்போதும் என் இதயத்தில் இருப்பீங்க. உலகம் முழுவதும் இருந்து எங்களுக்கு அன்பு மற்றும் பிரார்த்தனைகளை அனுப்பும் எல்லோருக்கும் நானும் என் குடும்பமும் நன்றி சொல்கிறோம். அது எங்களுக்கு இப்போது அதிகம் தேவை. இப்படி ஒரு நண்பர்கள் மற்றும் குடும்பம் இருப்பதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என மீனா குறிப்பிட்டுள்ளார்.