இயற்கை உரம் தயாரிக்கும் கூடத்தில் கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி பகுதியில் இயற்கை உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 26 லட்சம் மதிப்புடைய இந்த உரம் தயாரிக்கும் கூடத்தில் உணவு, பழம் மற்றும் காய்கறி ஆகியவற்றின் கழிவுகளை இயந்திரம் மூலமாக தொட்டிகளில் நிரப்பி இயற்கை உரம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இந்நிலையில் உரம் தயாரிக்கும் கூடத்தில் இம்மாவட்டத்தின் கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வில் கரசங்கால் ஊராட்சியில் அமைக்கப்பட்டிருக்கும் நாற்றங்கால் பண்ணையை நேரில் சென்று அங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகளை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
அப்போது கரசங்கால் பகுதிகளில் வசிக்கும் 10-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் தங்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் வசதி செய்து தருவதே இல்லை என்பதினால் தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதைதொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் கலீல் ரஹ்மான் என்பவர் கலெக்டரை நேரில் சந்தித்து தன்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் நடக்க முடியாமல் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் இழந்து வசிப்பதற்கு வீடு இல்லாமல் இருக்கின்றோம். அதனால் தங்களுக்கு உதவி செய்யுமாறு கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.