சட்ட விரோதமாக மணல் கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிராந்தமங்கலம் கால்வாயில் சிலர் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில வ்வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் மேல்துறையூர் கிராமத்தில் வசிக்கும் முருகேசன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் முருகேசனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.