சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் உழவர் சந்தை பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் உழவர் சந்தை பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் ஆனந்த் என்பவரது மனைவியான கவிதா என்பது தெரியவந்துள்ளது. இந்த பெண் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து கவிதா மற்றும் அவரது கூட்டாளிகளான அஜித், மணிகண்டன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.