Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தண்ணீர் கிடைக்கல…. ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!

நீர்வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 8 ஏக்கர் 70 சென்ட் நிலம் அதிகாரிகள் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ள மொசப்பாறை பகுதியில் உள்ள நீர்வரத்து கால்வாய்களை சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் மற்ற விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி, போடி தாசில்தார் செந்தில் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பன், அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவர் லோகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர்.

இதனையடுத்து நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடங்களில் நடப்பட்ட தென்னை மரம், மாமரம் உள்பட 8 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை மீட்டனர். மேலும் மரங்களை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றியதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |