தூத்துக்குடி மாவட்டத்தில் மேல வேலாயுதபுரம் கிராமத்தில் அழகம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் இறந்துள்ளார். இவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக பொதுமக்களும் உறவினர்களும் நேற்று மாலை சுடுகாடு செல்ல ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது.
அதனால் அந்த வழியாக மூதாட்டியின் உடலை எடுத்துச் சொல்ல கூடாது என தனியார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை கண்டித்து சுடுகாட்டத்திற்கு செல்வதற்கு நிரந்தர பாதை அமைத்து தர வேண்டும் என மூதாட்டியின் உறவினர்களும் கிராம மக்களும் மேல வேலாயுதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் என அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுடுகாட்டிற்கு செல்ல நிரந்தர பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உடனடியாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் வாக்களித்ததன் பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலந்து சென்றுள்ளனர்.