அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்து அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆசிரியர் பாலசண்முகம், பானுதாசன், விஜயாபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் கூட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகையை அரசு விரைந்து வழங்க வேண்டும்.
இதனையடுத்து வேலை நிறுத்த காலத்தில் பிடித்தம் செய்யப்படட ஊதியத்தை வழங்க தமிழக அரசு உத்தரவுவிட்டது. ஆனால் இதுவரை அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. எனவே உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.