ரத்தம் உறைதல் ஏற்படும் என அச்சத்திற்கு மத்தியில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகிறது
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு பல நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனேகா ஆகிய 2 மருந்துகளுக்கு பல நாடுகளில் தற்காலிக தடை விதித்து வருகின்றனர். இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பலருக்கும் ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்படுவதாக அந்த நாடுகளின் அரசு தெரிவித்துள்ளது.
இதன்படி அமெரிக்கா, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஆகிய நாடுகள் ஒன்றிணைத்து ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை தற்காலிக தடை விதித்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை டென்மார்க் முற்றிலுமாக தடை செய்துள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசு இந்த தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக செயல்படுவதாகவும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் கூறி தொடர்ந்து மக்களுக்கு செலுத்தி வருகிறது.