Categories
அரசியல்

“எங்களுக்கு நீங்க இத செஞ்சு தான் ஆகணும்….!” மோடியிடம் நேருக்குநேர் கேட்ட ஸ்டாலின்…..!!

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான புதிய கட்டடம் ஆகியவற்றை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டுமென பிரதமர் மோடியிடம் நேரடியாக மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். தமிழகத்தைப் பொறுத்தவரை நீட்தேர்வு என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீடிக்கிறது.

இதற்காக நீட் விலக்கு மசோதாவையும் தமிழக அரசு ஆளுநரிடம் அனுப்பிவைத்துள்ளது. ஆனால், மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டுமென ஆளுநருக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன.நீட் விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.

இதில், நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பாஜக தவிர எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. நீட் விலக்கு விஷயத்தில் சட்டப்போராட்டம் நடத்தப்போவதாக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதுஇந்நிலையில், இன்று நடைபெற்ற மருத்துவக் கல்லூரிகள் திறப்பு நிகழ்வில், நீட் விலக்கு கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் மு.க.ஸ்டாலின் நேரடியாக கேட்டுக்கொண்டார்.

Categories

Tech |