Categories
அரசியல்

எங்களுக்கு பயம் கிடையாது..! எல்லாத்துக்கு ரெடியா இருக்கோம்… திமுகவுக்கு சவால் விட்ட பாஜக …!!

பாஜகவுக்கு யாரையும் கண்டு அச்சமில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

முக.ஸ்டாலின் கருணாநிதியை விட ஆபத்தானவர் என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் திமுகவினர் பலரும் ஸ்டாலினை கண்டு பாஜக பயம் கொள்கின்றது என கருத்துக்களை பரிமாறி வந்தனர்.

இந்த ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்த கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் கொடுத்துள்ளார். காமராஜர் நினைவு நாளில் அவரின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ராஜா அண்ணன் சொன்னது அவரின் சொந்த கருத்து…  கருணாநிதி அவர்கள் சொந்தமாக மூளையை வைத்து அரசியல் செய்யும் பொழுது அது வேறு. இப்போது வெளியே இருந்து பல்வேறு லாபிகள் இருந்து அமைக்கும் போது இது வேறு என்கின்ற கருத்தை தான் நான் பார்க்கின்றேன். நீங்கள் கேட்ட கேள்வி கூட ராஜா அண்ணின் சொந்த கருத்து, என்னை கேட்டீர்கள் என்றால் நாங்கள் யாருக்கும் அஞ்சவில்லை, யாரையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருக்கின்றோம் என கூறினார்.

Categories

Tech |