திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரசின்னம்பட்டி பகுதியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பையா(23) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் மில்லியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பையாவும், அபிராமி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இரு விட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இரு விட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் சம்மதிக்காததால் போலீசார் காதல் ஜோடியை உங்கள் விருப்பப்படி வாழுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
Categories