Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” கல்லூரி மாணவிக்கு மிரட்டல்…. கோவையில் பரபரப்பு…!!

தந்தை வாங்கிய கடனை கேட்டு மிரட்டல் விடுப்பதாக கல்லூரி மாணவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலந்துறை முத்துசாமி கவுண்டர் வீதியில் கிணறு வெட்டும் தொழிலாளியான தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரபா என்ற மகள் இருக்கிறார். இவர் கோவை அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபா ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது வீட்டு பத்திரத்தை அடகு வைத்து கடந்த 2018-ஆம் ஆண்டு எனது தந்தை தனியார் நிதி நிறுவனத்திடம் 3 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதற்கு என் தந்தையும் பாட்டியும் இணைந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக வட்டி பணம் செலுத்தி வந்துள்ளனர். இதனையடுத்து பாட்டிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் பணத்தை கட்ட இயலவில்லை. கடந்த 2019-ஆம் ஆண்டு நிதி நிறுவன அதிகாரி ஒருவர் எங்களது வீட்டிற்கு வந்து பாட்டியிடம் உடனே கடன் தொகையை செலுத்துமாறு கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த எனது பாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் எனது தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில் கல்லூரிப்படிப்பை தொடர்புகொண்டு பகுதி நேர வேலைக்கு சென்று கடனை சிறிது சிறிதாக செலுத்தி வந்தேன். ஆனால் கடன் தொகையை விரைவாக அடைக்க முடியாததால் சிறிது அவகாசம் கேட்டேன். அதற்கு என்னையும், என் தாய் மற்றும் பள்ளியில் படிக்கும் தனது 3 சகோதரர்களையும் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தொந்தரவு செய்து மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் மன உளைச்சலில் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன். அதன் பிறகு குடும்ப சூழ்நிலையை நினைவில் வைத்து தற்கொலை முடிவை கைவிட்டேன். எனவே என்னையும் எனது குடும்பத்தினரையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவி புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |