Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லாலங்குடி திருப்பதி நகரில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிஏ பட்டதாரியான பிரியா(21) என்ற மகள் உள்ளார். இவரும் சிவாஜி(29) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதல் ஜோடி விட்டு விட்டு வெளியேறி நெம்மகோட்டை செத்தி விநாயகர் கோவில் வைத்து திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இருவீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதில் உடன்பாடு ஏற்படாததால் காதல் ஜோடியை போலீசார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |