Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு வேணும்” தஞ்சமடைந்த காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

காதல் திருமணம் செய்தவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கவுண்டர் பட்டியில் பட்டதாரியான கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் உறவினரான அகல்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அகல்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி அரியபித்தம்பட்டி பொம்மையம்மன் சுவாமி கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர்.

அதன்பின் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு வேடசந்தூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அகல்யாவின் பெற்றோர் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாததால் காவல்துறையினர் கோபாலகிருஷ்ணனின் பெற்றோருடன் காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |