Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு புடிக்கவே இல்ல…! இந்த பெயர் வேண்டவே வேண்டாம்… கோவையில் போராட்டத்தில் குதித்த மக்கள் ..!!

கோவை அருகே உள்ள காருண்யா நகரின் பெயரை நல்லூர் வயல் என்று மாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் சிறுவாணி சாலையில் காருண்யா பல்கலைக்கழகம் அருகே பகுதி காருண்யா பகுதி என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக அந்த பகுதி நல்லூர் வயல் என இருந்ததாகவும், அரசு ஆவணங்களிலும் இருந்த பெயர் காருண்யா நகர் என மாற்றம் செய்யப் பட்டதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் காருண்யா நகரின் பெயரை நல்லூர் வயல் என மாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி நல்லூர் வயல் மீட்பு குழுவினர் சிறுவாணி சாலை ஆலம் துறையில் கவன ஈர்ப்பு பேரணி சென்றனர். ஆனால் போலீஸ்கார் பேரணிக்கு தடை விதித்ததால் ஏராளமானோர் சாலையில் அமர்ந்து மறியலில் போராட்டம் செய்தனர்.

அப்பொழுது அரசு ஆவணங்களில் இருப்பதைப் போன்று காருண்யா நகரின் பெயரை நல்லூர் வயல் என மாற்றம் செய்ய வேண்டும் என அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் காணப்பட்டது.

Categories

Tech |