Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தோண்ட தோண்ட தங்கம்” புதையலுக்கு ஆசைப்பட்டு சென்ற வியாபாரி…. ரூ. 10 லட்சம் கொடுத்த பின் நடந்த ஷாக் ட்விஸ்ட்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வாகராயம்பாளையம் பகுதியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் ஒரு இளைஞர் அடிக்கடி மளிகை சாமான்கள் வாங்கி வந்துள்ளார். அந்த இளைஞர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சென்று நாங்கள் 2 பேரும் ஒரு வாடகை வீட்டில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறோம் என்றும், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளனர். நாங்கள் கூலி வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் ஒரு வீட்டில் குழி தோண்டி கொண்டிருந்தோம்.

அப்போது பூமிக்கு அடியில் இருந்து எங்களுக்கு தங்கப் புதையல் கிடைத்தது. அந்த புதையலை வீட்டின் உரிமையாளருக்கு கூட தெரியாமல் நாங்கள் எடுத்து வந்து விட்டோம். இப்போது எங்களுக்கு அவசரமாக கல்லூரி கட்டணம் செலுத்த பணம் தேவைப்படுவதால் 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு கிலோ தங்கத்தை விற்பனை செய்வதற்கு முடிவு செய்துள்ளோம். எனவே உங்களுக்கு தெரிந்த நபர்கள் யாராவது இருந்தால் எங்களிடம் இருக்கும் புதையல் பற்றி கூறுங்கள் என்று இளைஞர்கள் சதாசிவத்திடம் கூறியுள்ளனர்.

அதற்கு சதாசிவம் நானே பணத்தை தயார் செய்து 1 வாரத்தில் கொடுத்து விடுகிறேன் என்னிடமே புதையலை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இந்நிலையில் ஒரு வாரம் கழித்த பிறகு சதாசிவம் 10 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து அந்த இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். ஒரு கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை 10 லட்சம் ரூபாய்க்கு வாங்கி விட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்த சதாசிவத்திற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது சதாசிவம் தங்க நகைகளை பரிசோதிப்பதற்காக எடுத்துச் சென்றபோது அத்தனையும் போலி நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சதாசிவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போலி நகைகளை விற்பனை செய்த இளைஞர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |