தங்களுக்கு பேர குழந்தை பெற்றுத்தர வேண்டும் அல்லது 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரகாண்டை சேர்ந்த ஒரு தம்பதி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் பிரசாத். இவர் தனது மனைவியுடன் ஹரித்துவாரில் வாழ்ந்து வருகிறார். இவரது மகனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் மகனும் மருமகளும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தங்களிடம் இருந்த பணத்தையெல்லாம் செலவு செய்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர் .ஆனால் தங்களின் ஆசை இதுவரை நிறைவேறவில்லை என்று அவர் கூறியுள்ளார். தங்களின் பேர குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் தங்கள் மகன் மீது சஞ்சீவ் பிரசாத் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது: “என்னிடமிருந்த பணத்தை செலவு செய்து மகனை அமெரிக்காவில் படிக்க வைத்தேன். கடன் வாங்கி வீடு கட்டினேன் .எனது மகனுக்கு 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்தேன். எங்களுக்கு பேரக்குழந்தையை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. குழந்தையின் பாலினம் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. இன்னும் ஒரு வருடத்திற்குள் எங்களுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பண கஸ்டத்தில் இருக்கும் எங்களுக்கு எனது மகனும் மருமகளும் சேர்ந்து 5 கோடி கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்த வழக்கை நீதிமன்றம் எப்படி தீர்த்து வைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.