Categories
உலக செய்திகள்

எங்களுக்கு பைத்தியம் இல்லை…. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல்?….விளக்கம் அளித்த புதின் ….!!!!

ரஷிய அதிபர் புதின் அணு  ஆயுத தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரஷியா  அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாடல் நடத்திய போது கூறியிருந்ததாவது, “எங்களிடம் பலர் நீங்கள்   அணு ஆயுதங்களை பயன்படுத்துவீர்களா என கேட்கிறார்கள். நாங்கள் பைத்தியம் பிடிக்கவில்லை.

இந்நிலையில் அணு ஆயுதங்கள் என்றால் என்ன என்பது எங்களுக்கு தெரியும். மேலும் ஆயுதங்கள் ஒரு தடுப்புதான் தவிர  மோதலை அதிகரிக்க தூண்டும் காரணி அல்ல. ஒரு வேலை அமைதி வழிமுறைகள் தோன்றினால் நாங்கள் எங்களது நலனை பாதுகாக்க அனைத்து வழிகளையும் செய்வோம். இந்நிலையில் பிரித்தானியா நாட்டின் முன்னாள் பிரதமர் லிஸ்ட் ட்ரஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு  நிகழ்ச்சியில் சந்தித்தபோது அவர் WMD களை  பயன்படுத்த தயாராக இருப்பதாக கூறினார். மேலும் என்னை சில திட்டங்களை செய்ய தூண்டி விட்டார்” என  கூறியுள்ளார்.

Categories

Tech |