திண்டுக்கல்லில் தடுப்பூசி போடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக கடந்த 12-ஆம் தேதி கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது தடுப்பூசி, பேரூராட்சி அலுவலர்களுக்கு முதலில் போடப்பட்டது.
ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் துப்புரவு பணியாளர்கள் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். பின்னர் கோபமடைந்த அவர்கள் திடீரென்று மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை தலைமை டாக்டர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த துப்புரவு பணியாளர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் தடுப்பு ஊசி போடாமலேயே அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.