தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொட்டாரம் பகுதியில் ஒரு நகை கடை உள்ளது. இந்த கடையை நடராஜன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் வழக்கம் போல் காலை நேரத்தில் கடையை திறந்து லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து கடையில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது நகை வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் 2 பேர் கடைக்கு வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் நடராஜனிடம் மெட்டி காண்பிக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து நடராஜனும் மெட்டியை எடுத்து காண்பித்துக் கொண்டிருந்தார். ஆனால் நகைகளை பார்த்துவிட்டு 2 பேரும் எதுவும் வாங்காமல் கடையிலிருந்து வெளியே சென்றனர்.
இந்நிலையில் நடராஜன் நகைகளை அடிக்கி வைத்துக் கொண்டிருந்த போது 10 ஜோடி கம்மல் மாயமாகி இருந்தது. அதன் மதிப்பு 1,60,000 ரூபாய் ஆகும். இந்த நகைகளை நடராஜன் கடை முழுவதும் தேடி பார்த்துள்ளார். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தான் நடராஜனுக்கு நகை வாங்குவதற்காக வந்த 2 பேரும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நடராஜன் கன்னியாகுமரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.