இருளர் இன மக்களுக்கு வழங்கப்படும் மாற்று இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபள்ளிகுப்பம் பகுதிகளில் 200- க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்ட வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மண்டல துணை தாசில்தார் மெர்லின் ஜோதிகா, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இருளர் இன மக்களுக்கு வழங்கப்படும் மாற்று இடத்தை பார்வையிட்டனர். அதன் பின்னர் விரைவில் விசாரணை நடத்தி பட்டா வழங்கப்படும் என மக்களிடம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.