மதுரையை சேர்ந்த இரண்டு மாற்றுத்திறனாளி வீராங்கனைகள் சங்கீதா, தீபா. இவர்கள் இருவரும் 20 வருடங்களாக வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்துள்ளனர். இதனையடுத்து தாங்கள் வாங்கிய பதக்கங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்துள்ளனர். சங்கீதா டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும், தீபா பேட்மிட்டன் போட்டியில் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்றுள்ளார்கள்.
இருப்பினும் இவர்கள் தங்களுக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்திருந்தும் இருவருக்கும் அரசு எந்த வேலையும் கொடுக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த இவர்கள் தங்கள் தாங்கள் வாங்கிய பதக்கங்கள் எதுவுமே தங்களுக்கு வேண்டாம் என்று மதுரை ஆட்சியரிடம் முறையிட்டுள்ளார்கள்.