அலுவலக பணியில் இருந்து பெண்கள் அதிகமாக வெளியிடுவதன் காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு ஈடாக அனைத்து துறைகளிலும் பெண்களும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நிறைய இடங்களில் பெண்கள் தான் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர். குடும்பத்தை மட்டுமல்லாமல் செய்யும் தொழிலையும் அவர்கள் சார்ந்த ஊழியர்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என நிரூபித்து இருக்கின்றனர். இந்த நிலையில் பெண் ஊழியர்கள் பற்றி அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.
அதாவது பெண் ஊழியர்கள் பற்றி லிங்க்டுஇன் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் சம்பள குறைப்பு, பாரபட்சம், நெகிழ்வுத் தன்மை இன்மை போன்ற காரணங்களால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலையை விட்டு வெளியேறுகின்றனர் அல்லது வெளியேற நினைக்கிறார்கள் என தெரியவந்து இருக்கிறது. சுமார் 2,300 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளனர்.
கொரோனா பிரச்சனைக்கு பிறகு 10ல் 8 பெண்கள் அதாவது 83 சதவீதத்தினர் பணிபுரியும் இடத்தில் தாங்கள் மிகவும் நெகிழ்வான முறையில் வேலை செய்ய விரும்புவதாக இந்த ஆய்வில் கூறியுள்ளனர். மேலும் பணிபுரியும் பெண்கள் சுமார் 72 சதவீதத்தினர் வேலை வாய்ப்புகளை நிராகரிப்பதாகவும், 70% ஏற்கனவே வேலையை விட்டு வெளியே விட்டனர் அல்லது வெளியேறுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்துவதற்காக வேலையை விட்டு வெளியேறுவதற்காக நிறைய பேர் கூறியிருக்கிறார்கள்.
கண்டெடுக்கப்பட்ட பெண்களில் ஐந்து பேரில் இருவர் நெகிழ்வுத்தன்மை வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலைப்படுத்த உதவுகிறது என தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் மூன்றில் ஒருவர் தங்கள் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் அதன்மூலம் வேலையை தொடர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். பணியிடத்தில் ஆண்களுக்கு நிகராக நடத்தப்படாமல் இருப்பது மற்ற தொந்தரவுகள் போன்ற காரணங்களால் நிறைய பெண்கள் வேலையை விட்டு வெளியேறுவதாக இந்த ஆய்வில் கூறியுள்ளனர்.