தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சியுடன் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும் என்று பிரேமலதா கூறியுள்ளார்.
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சியில் இடம்பெறும் கூட்டணி மட்டுமே வெற்றி பெறும். திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு மற்றும் முரண்பாடுகள் இருக்கின்றன. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.
மேலும் அதிமுக ஆட்சியில் நிறை மற்றும் குறைகள் கலந்த ஆட்சியாக தேமுதிக பார்க்கிறது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.