பிரிட்டன் இளவரசர் ஹரி மேகனின் அதிகாரப்பூர்வ திருமணச் சான்றிதழ் வெளியாகி பேட்டியில் அவர்கள் கூறியது பொய் என நிரூபித்துள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹரிக்கும், மேகனுக்கும் கடந்த 2018 மே 19 ஆம் தேதி தேவாலயத்தில் திருமணம் நடைபெற்றது. ஆனால் ஹரியும் மேகனும் ஓபரா தொலைக்காட்சி பேட்டியொன்றில் தங்களின் திருமணம் தேதிக்கு மூன்று நாள் முன்பே தங்கள் வீட்டிற்கு பின்னால் இருந்த தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறினர். இந்த பேட்டி மக்களிடையே பெரும் கோபத்தை உள்ளாக்கியது.
திருமணம் நடந்து முடிந்த பிறகு ஏன் மீண்டும் திருமணம் செய்ய வேண்டும் என்றும் இது மக்களின் வரிப்பணத்தை வீணாக்கும் என்பது மக்களின் கோபமாகும். இதனைத் தொடர்ந்து திருச்சபையின் சார்பில் அவ்வாறு ஒரு திருமணம் நடக்கவில்லை என சான்று அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஹரியும் மேகனும் மீண்டும் ஒரு செய்தியை வெளியிட்டனர்.
அதில் தாங்கள் மூன்று நாட்களுக்கு முன் திருமணம் செய்யவில்லை என்றும் தங்களின் திருமண ஒப்பந்தங்களை பகிர்ந்து கொண்டோம் எனவும் செய்தியை வெளியிட்டனர். இது மக்களின் கோபத்தை மேலும் தூண்டியது. இந்நிலையில் அவர்களின் திருமண சான்றிதழ் தற்போது வெளியானது அதில் 2018 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி தான் திருமணம் நடந்தது என்ற அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.