திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இயற்கை பொருளில் தயாரித்த உணவிற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு உணவு தயாரித்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான சோதனை ஓட்டம் கடந்த 3 நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய உள்ளதாக தேவஸ்தானம் நேற்று அதிரடியாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் தெரிவித்துள்ளதாவது: இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு பக்தர்களுக்கு குறைந்த விலையில் உணவு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் அறங்காவலர்கள் குழுவின் அனுமதி பெறாமல் இந்தத் திட்டத்தை தொடங்கியதால் தற்போது இதை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். அறங்காவலர் குழுவின் தலைவராக மீண்டும் நான் தேர்வாகி உள்ளேன். ஆனால் இன்னும் உறுப்பினர்கள் தேர்வு செய்யவில்லை. இதுபோன்ற நிலையில் தணிக்கையாக அதிகாரிகள் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனை ரத்து செய்கிறோம். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச உணவு முறை எப்பொழுதும் போல் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.