நேபாள நாட்டில் இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
சில நாட்களாக இந்தியாவுக்கும் , நேபாள நாட்டுக்கும் இடையில் பெரும் கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்நிலையில் நேபாளத்தில் கொரோனா தொற்றுநோய் அதிகரிக்க இந்தியாதான் காரணம் என்ற குற்றத்தை முன்வைத்து நேபாள அரசு இந்திய எல்லையில் சாலை அமைக்கக்கூடாது என எதிர்ப்பு கூறியது. அதுமட்டுமின்றி நேபாள நாடாளுமன்றம் ஒப்புதலின்படி இந்திய நாட்டின் சில பகுதிகளை தங்களுடைய நாட்டு வரைபடத்தில் நேபாளம் இணைத்தது.
இதற்கு மிகப்பெரிய எதிர்ப்பை இந்திய அரசு தெரிவித்தது. இத்தகைய பல்வேறு காரணங்களால் நேபாள நாட்டில் இன்று மாலை முதல் தூர்தர்ஷன் என்ற சேனலை தவிர மற்ற இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கு நேபாள நாடு தடை விதித்துள்ளது. அதற்கு காரணம் அந்நாட்டிற்கு புறம்பாக பல்வேறு தவறான குற்றங்களை இத்தகைய சேனல்கள் ஒளிபரப்புவதாக குற்றம் சாட்டுகின்றனர்.