தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஞானபீடம், சாகித்ய அகாதமி போன்ற தேசிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் இலக்கிய விருதுகளைப் பெற்ற தமிழக எழுத்தாளர்களை கௌரவிக்கும் விதமாக வீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதற்கு தமிழக எழுத்தாளர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதற்கு வரவேற்பு தெரிவித்த இயக்குனர் சேரன், எழுத்தாளர்களை பாராட்டுக்குரியது. அதேபோல் திரைத்துறையிலும் சமூக சீர்திருத்தப் படங்களை உருவாக்கும் இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.