Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“எங்களை காப்பாற்றுங்கள்” நடுரோட்டில் கதறிய காதல் தம்பதி…. கோவையில் பரபரப்பு…!!

காதல் தம்பதி நடுரோட்டில் தங்களை காப்பாற்றுமாறு கதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை-அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் சிக்னலில் நேற்று இரவு வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அவ்வழியாக வந்த காரிலிருந்து இறங்கிய காதல் ஜோடி தங்களை காப்பாற்றுமாறு சாலையோரத்தில் நின்று கொண்டு கூச்சலிட்டனர். இதனை பார்த்ததும் சிலர் வாகனங்களை விட்டு இறங்கி அவர்களிடம் சென்று விசாரித்துள்ளனர். அப்போது எங்கள் பெற்றோர் எங்களை பிரிக்க நினைக்கிறார்கள். கத்தியை காட்டி மிரட்டுகிறார்கள். எனவே யாராவது எங்களுக்கு உதவுங்கள் என அவர்கள் கதறியுள்ளனர்.

இதனைப் பார்த்த போக்குவரத்து காவலர் ஒருவர் அங்கு சென்றபோது காதல் ஜோடிகள் அவரது காலில் விழுந்து எங்களை காப்பாற்றுங்கள் என கதறியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது வாலிபர் கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் வசிப்பதும், அந்த இளம்பெண் சரவணம்பட்டியில் வசிப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி நேற்று திருமணம் செய்துள்ளனர். அந்த இளம்பெண் கூறியதாவது, எனது தந்தை எங்களை சேர்த்து வைப்பதாக கூறி காரில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் எங்களை தேனிக்கு கடத்தி செல்ல முயன்றது எனக்கு தெரிந்தது. இதனால் எங்களைப் பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் கார் நின்றதும் தப்பிக்க முயன்றோம் என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் காவல்துறையினர் அவர்களை பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். நடுரோட்டில் காதல் தம்பதி கூச்சலிட்டு கதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |