குஜராத் மாநிலத்தில் ஆட்சியமைத்தால் முக்கிய 8 நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ-க்கும் ஒரு பள்ளியை ஆம் ஆத்மி அரசு கட்டும் என்று தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் அடுத்த வருடம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மொத்தம் 182 தொகுதிகளை உடைய குஜராத் சட்டப் பேரவையின் பதவிக் காலம் 2023ம் வருடம் பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடனும் நிறைவடைகிறது. அத்துடன் ஹிமாச்சலப்பிரதேச மாநில சட்டப் பேரவையின் பதவிக் காலமும் முடிவடைகிறது. அங்கு இந்த வருடம் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகவே இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
மாநிலத்தில் ஆளும் பாஜக-வுக்கும், எதிா்க் கட்சியான காங்கிரஸும் இதுவரையிலும் வேட்பாளா்கள் யாரையும் அறிவிக்காத சூழ்நிலையில், அங்கு ஆம் ஆத்மி முழுவீச்சில் தோ்தல்களத்தில் இறங்கி இருக்கிறது. இந்த நிலையில் இன்று அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா குஜராத் மக்கள் எங்களை வெற்றிபெறச் செய்தால் அகமதாபாத், சூரத், வதோதரா, ஜாம்நகர், ராஜ்கோட், பாவ்நகர், காந்திநகர் மற்றும் ஜூனாகத் போன்ற நகரங்களில் ஒவ்வொரு 4 கி.மீ.க்கும் 1 பள்ளியை கட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்