Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாக்கியது ஏன்?…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. தேனியில் பரபரப்பு….!!!!

காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்திற்குள் புகுந்து பொருட்களை  சேதப்படுத்தியதோடு மட்டும் இல்லாமல்  நிர்வாகிகளை தாக்கிய காவல்துறையினரை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் சங்கரநாராயணன், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர்.

Categories

Tech |