தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரியார் பிறந்த நாள் விழாவையொட்டி சமூக நீதி நாளாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்நிலையில் கோவையில் திமுக சார்பில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் படங்களுடன் எங்களை தாண்டி தமிழ்நாட்டை தொட்ரா பாக்கலாம் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது. கோவை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது. மேலும் இந்த சுவரொட்டியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, உதயநிதி ஸ்டாலின், எம்எல்ஏ புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.