Categories
தேனி மாவட்ட செய்திகள்

எங்களை தாண்டி பணம் போகாது…. பறக்கும்படையினர் அதிரடி…. ஆட்சியரின் திடீர் சோதனை….!!

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாவட்ட முழுவதிலும் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் ஆட்சியர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நெருங்கி வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேனி முத்துதேவன்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்சியர் முரளிதரனும் சம்பவ இடத்திற்கு சென்று பறக்கும் படை அதிகாரிகளுடன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

இதனையடுத்து முத்துதேவன்பட்டி, வீரபாண்டி, வயல்பட்டி போன்ற பகுதிகளுக்கு சென்று பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப் படுகிறதா என ஆய்வு செய்துள்ளார். மேலும் ஆண்டிப்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கிற்கு சென்று ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் அரிசி மற்றும் உணவு பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |