பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் வைத்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நகர தலைவர் முகமது சமீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதலை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட செயலாளர் அப்பாஸ் அலி, சதாம் உசேன், முகமது அசார், அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.