Categories
இந்திய சினிமா சினிமா

“எங்களை பலாத்காரம் செய்யாதீர்கள்”….. கேன்ஸ் விழாவில் அரைநிர்வாணமாக ஓடி வந்த பெண்….!!!!

75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகின்றது. 75வது விழா என்பதால் வழக்கமான அதைவிட கோலாகலமாக இந்த விழா நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் ஒவ்வொரு நாட்டினரும் தங்களது தேசிய கொடியை பிடித்து அணிவகுத்து வருவது போன்று பல்வேறு நாட்டைச் சேர்ந்த திரைக்கலைஞர்கள் தனிதனியாக ரெட் கார்பெட்டில் அணிவகுத்து வந்தனர். அந்தவகையில் இந்திய அணியில் நடிகைகள் ள் தீபிகா படுகோன், பூஜா ஹெக்டே, தமன்னா, இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், ரிக்கி கெஜ் அணிவகுத்து வந்தனர்.

இந்த விழாவில் பல நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள், கட்சி தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த விழாவின் பொழுது திடீரென்று பெண் ஒருவரை நிர்வாணமாக ஓடி வந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. உக்ரைன் நாட்டின் கொடியை தனது உடலில் வைத்திருந்த அவர் திடீரென்று ஆடைகளை கழற்றி வீசி, எங்களை கற்பழிப்பதை நிறுத்துங்கள் என்று கோஷமிட்டார். உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தி ஆடையை போட்டு அழைத்து சென்றனர். உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ரஷ்ய படைகள் அங்கு இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் உள்ளது.

Categories

Tech |