பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூரில் பாலகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பாலகுமாரும் உறவினரான மோனிஷா என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோனிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் இருக்கும் சௌந்தரராஜபெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர் இதனை அடுத்து பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை. எனவே உங்கள் விருப்பப்படி வாழலாம் எனக் கூறி போலீசார் காதல் ஜோடியை அனுப்பி வைத்துள்ளனர்.