Categories
மாநில செய்திகள்

எங்களை பெருமூச்சு விட வைத்த…. முதல்வர் அவர்களுக்கு நன்றி…. இயக்குனர் பாரதிராஜா அறிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகினை கருப்பு நாட்களாக மாற்றிவிட்டது கொரோனா. புதிய திரைப்படங்கள், படப்பிடிப்பு வெளியீடு எல்லாம் பெருமளவில் முடங்கி விட்டன. நிச்சயமில்லாத எதிர்காலத்தில் நம்பிக்கை போய்விடுமா? என்று கேள்விக்குறியோடு நகர்ந்த நாட்களில் இன்று முதல் திரையரங்குகள் திறந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்த ஒரு  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |