Categories
சினிமா தமிழ் சினிமா

எங்களை பெருமைப்பட வச்சிட்டீங்க… நீங்க வேற லெவல்… பிரபல நடிகருக்கு வாழ்த்துக் கூறிய மாமியார்…!!!

நடிகர் ஆர்யாவை நினைத்து பெருமைப்படுவதாக அவரது மனைவியின் தாயார் சாஹீன் பானு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கலையரசன், பசுபதி, சந்தோஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 1980-களில் நடக்கும் குத்து சண்டையை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்காக நடிகர் ஆர்யா தனது உடல் தோற்றத்தை முரட்டுத்தனமாக மாற்றிய புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் மிரள வைத்தார்.

நேற்று  சார்பட்டா பரம்பரை  படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் நடிகர் ஆர்யாவின் மாமியாரும் அவரது மனைவி சாயிஷாவின் தாயாருமான சாஹீன் பானு ஆர்யாவுக்காக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் உச்சம் தான் நீங்கள். எங்களை நீங்கள் பெருமைப்பட வைத்துவிட்டீர்கள்.. வேற லெவல்’ என பதிவிட்டுள்ளார். மேலும் தனது மாமியாரின் இந்த பதிவுக்கு பதிலளித்த  ஆர்யா ‘நன்றி அம்மா’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |