தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் பார்த்தா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு மனோன்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களது மகன் ஜான் பாஸ்கோ சினிமா துறையில் எடிட்டராக இருக்கிறார். இந்நிலையில் பார்த்தா நரம்பு சம்பந்தப்பட்ட நோயாலும், மனோன்மணி மார்பக புற்று நோயாலும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதால் செலவு அதிகமானது. அதன்பின் சிகிச்சை பெற செலவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தங்களை கவனித்துக்கொள்ள ஆள் இல்லாததை நினைத்து மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து மயங்கிய நிலையில் கிடந்த இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.