Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“எங்களை வேறு பள்ளியில் சேர்ந்து படிக்க சொல்றாங்க”…. அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அவதி….!!!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலமாக அழித்தனர். இதில் ஏலாக்குறிச்சியை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை தந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது “ஏழக்குறிச்சியில் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த ஆண்டு மாதிரி பள்ளியாக மாற்றப்பட்டது. தற்போது இதில் 936 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் 11-ம் வகுப்பு வேளாண்மை அறிவியல் பாடப் பிரிவில் 45 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது எங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்பதால் வேளாண்மை அறிவியல் பாட வகுப்பை கலைக்க உள்ளதால் வேறு பாடப்பிரிவில் சேர்த்துக் கொள்ளவும் அல்லது வேறு பள்ளியில் சேர்ந்து படிக்குமாறும் ஆசிரியர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல் 12 ஆம் வகுப்பில் அதே பாடப்பிரிவில் ஆசிரியர் இருக்கும் போது வகுப்பு நடைபெறுகிறது. இந்த ஆசிரியரை கொண்டு பாடம் நடத்தாமல் 11-ம் வகுப்பை பாதியில் கலைப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும். எனவே தொடர்ந்து அந்த பாடப்பிரிவு செயல்பட வேண்டும். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |