Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களோட ஓட்டு என்னாச்சு…? முன்னாள் ராணுவ வீரர்கள் மனு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் குழு தேர்தலுக்கான பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்தியது. மேலும் அந்தந்த மாவட்டத்தின் மூலம் அப்பகுதியிலிருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுக்கப்பட்ட அழைப்பின் வாயிலாக 860 முன்னாள் ராணுவத்தினர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இவர்கள் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்ததும் வாக்குப்பதிவு பெட்டிகளையும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அடையாள அட்டையையும் ஒப்படைத்துவிட்டு அவர்களது ஊதியத்தையும் பெற்றுள்ளார்கள். ஆனால் 860 நபர்களுக்கும் தபால் ஓட்டு இன்றளவும் வரவில்லை என்று இவர்கள் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |