Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களோட வாழ்வாதாரமே போச்சு…! இதுக்கு அனுமதி குடுங்க… நாடக கலைஞர்கள் மனு..!!

திண்டுக்கல் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் நாடக கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பழனி தாலுகா பகுதியை சேர்ந்த நாடக கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அப்போது அவர்கள் காளியம்மன், விநாயகர், கருப்பசாமி ஆகிய உள்ளிட்ட தெய்வங்களின் வேடம் அணிந்து இருந்தனர். மேளதாளம் முழங்க அங்கிருந்து ஊர்வலமாக சென்று உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் 600-க்கும் மேற்பட்ட நாடகக் கலைஞர்கள் பழனி தாலுகா பகுதியில் வசித்து வருகிறோம்.

எங்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊராடங்கால் கடந்த வருடம் முழுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு மீண்டும் கோவில் திருவிழா நடத்த தடை விதித்துள்ளது. இது எங்களை மேலும் நிலைகுலைய செய்துள்ளது. அரசு அறிவித்த நிவாரணமும் எங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. எனவே கட்டுப்பாடுகளுடன் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும், அனைத்து கலைஞர்களுக்கும் நிவாரணம் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

Categories

Tech |