சீனாவுக்கு ரஷ்யா ஆதரவு கொடுக்கும் என ரஷ்ய நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடுமையான எதிர்ப்பை மீறி தைவானுக்கு சென்றார். இதனால் சீனா அமெரிக்காவின் மீது கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் தற்போது தைவான் மீது போர் தொடங்குவதற்கும் சீனா தயாராக உள்ளது. இந்நிலையில் சீனா தைவானுக்கு எதிராக போர் தொடுக்கும் என்றால் ரஷ்யா சீனாவுக்கு ஆதரவு கொடுத்து போரில் உதவி செய்யும் என ரஷ்யா சென்ட்டர் விலாடிமிர் கூறியுள்ளார்.
இவர் சீனாவுக்கு ஆதரவாக போரில் களமிறங்குவதில் எந்த ஒரு தவறும் இல்லை எனவும், சீனாவுக்கு உதவி செய்வதால் ரஷ்யாவுக்கு ஆதாயம் மட்டுமே கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் தைவான் மீது சீனா போர் தொடுத்தால் கண்டிப்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவுக்கு எதிராக தங்களுடைய படையை அனுப்புவார். எனவே ரஷ்யாவின் உதவி இல்லாமல் சீனாவால் வெற்றி பெறுவது சாத்தியம் கிடையாது எனவும் கூறியுள்ளார்.